Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Editorial / 2019 ஏப்ரல் 18 , பி.ப. 02:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி மாவட்டத்தில், கடந்த டிசெம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, 5,300 மில்லியன் ரூபாய்க்கும் மேற்பட்பட்ட அழிவுகள் ஏற்பட்டுள்ள போதும், அதற்கான இழப்பீடாக இதுவரை 358 மில்லியன் ரூபாயே கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில், கடந்த டிசெம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 24 ஆயிரத்து 184 குடும்பங்கள் பாதிக்கப்பட்டதுடன், 386 வீடுகள் முழுமையாகவும் 2,223 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்திருந்தன.
அத்துடன், 189 கிலோமீற்றர் வீதிகள் சேதமடைந்த அதேவேளை, 26,400 ஏக்கர் வயல் நிலங்களும் 24,00 ஏக்கர் வரையான ஏனைய பயிர்ச் செய்கை நிலங்களும் அழிவடைந்தன.
மொத்தமாக, மேற்படி வெள்ளப் பாதிப்பு காரணமாக, 53,00 மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டிருந்ததாக மதிப்பிடப்பட்டிருந்தது.
உடனடியாகவே இப்பிரதேசத்திற்கு விஜயம் செய்து நிலமைகளை அவதானித்த அமைச்சர்கள் சபாநாயகர்; பிரதமர் இதற்கான
இந்த இழப்பீடுகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்தபோதும், இதுவரை 358 மில்லியன் ரூபாய் நிதி மாத்திரமே கிடைக்கப்பெற்றுள்ளது.
இதுதவிர, அழிவடைந்த கால்நடைகள், வாழ்வாதார இழப்புக்கான எந்தவிதமான இழப்பீடுகளும் இதுவரை வழங்கப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago