2025 நவம்பர் 11, செவ்வாய்க்கிழமை

டிப்பர் மோதியதில் கிராம சேவகர் காயம்

Niroshini   / 2021 டிசெம்பர் 08 , பி.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா - மயிலங்குளம் பகுதியில், இன்று (08) காலை 9 மணியளவில், டிப்பர் மோதி, கிராம சேவையாளர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

ஆசிகுளம் கிராம சேவகரான பாலசுப்பிரமணியம் ஜனகன் என்பவரே, இவ்வாறு படுகாயமடைந்தவர் ஆவர்.

பண்டாரிக்குளம், தனது வீட்டில் இருந்து ஆசிகுளம் கிராம சேவகர் பிரிவுக்கு, இன்று காலை கடமைக்கு சென்று கொண்டிருந்த போது, மயிலங்குளம் சந்திக்கு அண்மித்த பகுதியில் உள்ள ஒழுங்கையில் இருந்து எதுவித சமிக்ஞைகளும் இன்றி பிரதான வீதிக்கு கிரவல் ஏற்றி கொண்டு வந்த டிப்பர் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, கிராம சேவகர் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளாகியது.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X