Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
க. அகரன் / 2017 ஜூலை 16 , பி.ப. 08:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
வட மாகாண அமைச்சராகவுள்ள டெனிஸ்வரனை பதவி நீக்கியதும் அமைச்சராக யாரைப் பரிந்துரைப்பது என ரெலோவின் அரசியல் குழு, வவுனியாவில் இன்று ஆராய்ந்துள்ளது.
இது தொடர்பில், வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதி தலைவருமான செல்வம் அடைக்கலநாதனிடம் வினவியபோது,
“கட்சி விதிமுறைகளை மீறி வட மாகாண அமைச்சர் டெனிஸ்வரன் செயற்பட்டு வருவதாகவும் அவரை அமைச்சுப் பதவியில் இருந்து நீக்குமாறும் வட மாகாண முதலமைச்சருக்கு எமது கட்சி பரிந்துரைத்திருந்தது.
இந்நிலையில், அமைச்சர் டெனிஸ்வரனை பதவியிலிருந்து நீக்கும் பட்சத்தில், தமது கட்சியின் சார்பில் யாரை அமைச்சராக நியமிக்க பரிந்துரைப்பது என்பது தொடர்பாக, வவுனியாவில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகத்தில், கட்சியின் அரசியல்குழு கூடி இன்று தீர்மானித்திருந்தது.
எனினும் இக்கூட்டத்தில் எவ்வித முடிவும் எட்டப்படாமையினால், நாளை அனைத்து அரசியல்குழு உறுப்பினர்களும் தொலைபேசி மூலமாக தமது தெரிவுகளைத் தெரிவிப்பது எனவும் அதன்பின்னர் உடனடியாக முதலமைச்சருக்கு ரெலோ கட்சியின் சார்பில் புதிய அமைச்சருக்கான நபரை பரிந்துரைப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .