2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

டெலோவின் 50ஆவது ஆண்டு நிறைவு விழா

Editorial   / 2020 பெப்ரவரி 16 , பி.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

தமிழீழ விடுதலை இயக்கத்தின் 50ஆவது ஆண்டு நிறைவு விழா நிகழ்வு, இன்று (16) மாலை 3 மணிக்கு, வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

டெலோ இயக்கத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், க.கோடீஸ்வரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான வினோநோகராதலிங்கம், சிவநாதன் கிசோர்,  முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம்,  ஜனா, செ.மயூரன், ஜனநாயக போராளிகள் கட்சியினர், ஈரோஸ் அமைப்பினர், உட்பட பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக கட்சியின் கொடியை தலைவர் செல்வம் அடைக்கலநாதனால் ஏற்றிவைத்தார்.

இதன்போது 50ஆவது நிறைவை முன்னிட்டு கேக் வெட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .