Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Menaka Mookandi / 2016 ஓகஸ்ட் 16 , மு.ப. 11:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரொமேஸ் மதுசங்க
நீண்டகாலம் இழுபறி நிலைக்கு உள்ளாகியிருந்த வடக்குக்கான பொருளாதார மத்திய நிலையத்தை, இரு பகுதிகளாக இருவேறு இடங்களில் நிர்மாணிக்க ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில், அவ்விரு நிலையங்களும் அமையப்போகும் இடங்கள் பற்றிய இறுதித் தீர்மானம், நேற்று திங்கட்கிழமை எட்டப்பட்டது.
இந்நிலையில், வவுனியாவுக்கான வவுனியாவுக்கான பொருளாதார மையத்தை, வவுனியா, தேக்கவத்தையில் அமைப்பதெனவும் முல்லைத்தீவுக்கான பொருளாதார மத்திய நிலையத்தை மாங்குளத்தில் நிர்மாணிப்பதெனவும் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பி.ஹரிசன், கூறினார்.
வவுனியா அரசாங்க அதிபர் எம்.பி.ஆர்.புஷ்பகுமார தலைமையில், கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பி.ஹரிசன், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன், வடமாகாண முதலமைச்சரின் செயலாளர் வி.கேதீஸ்வரன் ஆகியோரின் பங்குபற்றலுடன், வவுனியா கச்சேரியில் இடம்பெற்ற உயர்மட்டக் கூட்டத்தின் போதே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இக்கலந்துரையாடலில், வவுனியா விவசாய சங்கப் பிரதிநிதிகளும் வவுனியா மாவட்டத்தைத் தளமாகக்கொண்ட மக்கள் பிரதிநிதிகளும் பங்கேற்றதுடன், தத்தமது கருத்துக்களையும் வெளியிட்டனர். இக்கலந்துரையாடலின் பின்னர், அமைச்சர்களான ஹரிசன் மற்றும் ரிஷாட் ஆகியோர், வவுனியா தேக்கவத்தைக்குச் சென்று, பொருளாதார மையத்தை அமைப்பதற்கு முடிவு செய்யப்பட்ட காணியினைப் பார்வையிட்டனர்.
பொருளாதார மத்திய நிலையத்தை நிர்மாணிப்பதற்கு, தேக்கவத்தையே மிகவும் பொருத்தமான இடமென உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே, அமைச்சர்கள், அதிகாரிகள், விவசாயப் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல், வவுனியா கச்சேரியில் இடம்பெற்றது.
இந்நிலையில், பொருளாதார மையத்தில் எவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்வதெனவும் எவ்வாறான விளைபொருட்களை கொண்டுவருவது எனவும் தீர்மானிப்பதற்காக, எதிர்வரும் 27ஆம் திகதியன்று, அமைச்சர் ஹரிசனுக்கும் விவசாய சங்கப் பிரதிநிதிகளுக்குமான சந்திப்பொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வவுனியா பொருளாதார மையத்தை, தாண்டிக்குளத்தில் அமைப்பதா? அல்லது ஓமந்தையில் அமைப்பதா? என்ற சர்ச்சை ஏற்பட்டதனால், அமைச்சரவையிலும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரிடமும் இந்த விடயம் எடுத்துச்செல்லப்பட்டிருந்தது. இதனையடுத்தே, இரு பொருளாதார மத்திய நிலையங்களை அமைப்பதென அறிவிக்கப்பட்டதை அடுத்தே, தேக்கவத்தையில் வவுனியாவுக்கான பொருளாதர மையத்தையும் மாங்குளத்தில் முல்லைத்தீவுக்கான மையத்தையும் அமைப்பது என இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago
7 hours ago
9 hours ago