2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

தேசிய பாடசாலைக்கு ஆசிரியர் விடுதி

George   / 2016 செப்டெம்பர் 12 , பி.ப. 01:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு, மல்லாவி மத்திய கல்லூரியில், தேசிய பாடசாலைக்கான நிதி ஒதுக்கீட்டின் ஊடாக 12.5 மில்லியன் ரூபாய் செலவில், ஆசிரியர்களுக்கான விடுதியொன்று நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.

534 மாணவர்கள் கல்வி பயிலும் இக்கல்லூரியில், 34 ஆசிரியர்கள் சேவையாற்றுவதுடன், விடுதி நெருக்கடியினால், வெளியிடங்களில் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், ஆசிரியர்கள் தங்குவதற்காக, இவ்விடுதி நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரி, மல்லாவி மத்திய கல்லூரி ஆகிய தேசிய பாடசாலைகள் இரண்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .