Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Administrator / 2016 செப்டெம்பர் 17 , மு.ப. 07:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நிபோஜன்
தியாகதீபம் திலீபன் நினைவுநாள் நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை (18) கிளிநொச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஜனநாயக போராளிகள் கட்சி தெரிவித்துள்ளது. தமிழர் விடுதலை கூட்டணியும், ஜனநாயக போராளிகள் கட்சியும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள குறித்த நினைவேந்தல் நிகழ்வு, கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழர் விடுதலை கூட்டணி அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கிளிநொச்சி ஏ9 வீதியில், அமைந்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி அலுவலகத்தில் காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது. கடந்த வியாழக்கிழமை (15) யாழ் நல்லூரில் அமைந்துள்ள திலீபன் நினைவு தூபியில் குறித்த நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நாளை கிளிநொச்சியில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள நினைவேந்தல் நிகழ்வினை, தமிழர் விடுதலை கூட்டணியும் ஜனநாயக போராளிகள் கட்சியும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது. குறித்த நினைவேந்தல் நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புக்கள், பிரதேச மக்கள், ஆகியோரை கலந்து கொள்ளுமாறும் நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். குறித்த நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
5 hours ago