Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Princiya Dixci / 2016 ஜூன் 06 , பி.ப. 09:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார், திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்களை, பரிசோதனைகளுக்காக அமெரிக்காவின் உள்ள புளோரிடா மாநிலத்தில் உள்ள நிறுவனமொன்றுக்கு அனுப்ப அனுமதி வழங்குமாறு, குற்றப்புலனாய்வுப் பிரிவினரினால், மன்னார் நீதிமன்றத்திடம் நேற்று திங்கட்கிழமை (06) கோரிக்கை விடுக்கப்பட்டது.
திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழியைத் தோண்டுவது தொடர்பான வழக்கு, மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே, மன்றில் ஆஜராகியிருந்த குற்றப்புலனாய்வுப் பிரிவினர், மேற்கண்ட கோரிக்கையினை விடுத்தனர்.
இருப்பினும், காணாமல் போனவர்களின் குடும்ப உறவுகள் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி, வி.எஸ்.நிறைஞ்சன் எதிர்ப்பு தெரிவித்தார். 'குறித்த நிறுவனம் ஒரு சிறந்த நிறுவனம் அல்ல. குறித்த நிறுவனம் எவ்வாறு பரிசோதனைகளை மேற்கொள்ளுகின்றது என்பது குறித்து மன்னார் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட வேண்டும். இந்த அமெரிக்க நிறுவனத்தில் நம்பிக்கை இல்லை' என்று அந்த சட்டத்தரணி தெரிவித்தார்.
அத்துடன், காணாமல் போனவர்கள் சார்பாகவும் பரிசோதனைகள் நடத்தவுள்ளதாகக் கூறப்படும் மூன்று நிவுனங்கள் தொடர்பான அறிக்கையினை, அடுத்த தவணையில் மன்றில் சமர்ப்பிப்போம் எனவும், அந்த சட்டத்தரணி கூறியதை அடுத்து, இந்த வழக்கு விசாரணையை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதிக்கு, நீதவான் ஒத்திவைத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
8 hours ago