2025 ஜூலை 07, திங்கட்கிழமை

தொழிநுட்ப ஆய்வு கூடம் திறந்துவைப்பு

George   / 2016 ஒக்டோபர் 08 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மத்திய கல்வி அமைச்சினால் மன்னார்-அல்-அஸ்ஹர் ம.வி தேசிய பாடசாலையில் அமைக்கப்பட்ட   தொழிநுட்ப ஆய்வுக் கூடம், வெள்ளிக்கிழமை(7) மாலை கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஷ்ணனால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

பாடசாலை அதிபர் எம்.வை.மாஹீர் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வின்போது வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.காதர் மஸ்தான், வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர் எச்.எம்.ரயீஸ்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹீனைஸ் பாரூக், மன்னார் வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி சுகந்தி செபஸ்ரியான் ஆகியோர் இணைந்து குறித்த தொழிநுட்ப ஆய்வு கூடத்தினை வைபவ ரீதியாக திறந்துவைத்தனர்.

அதனைத் தொடர்ந்து பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றதோடு இவ்வருடம் இடம்பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் 180 புள்ளிகளைப் பெற்று முதல் நிலை அடைந்த மாணவன் எச்.ஹினான் அஹமட் மற்றும் சித்தியடைந்த ஏனைய மாணவர்களுக்கும் அமைச்சர் விருதுகள் வழங்கி கௌரவித்தார்.

மேலும், கடந்த வருடம் இடம்பெற்ற உயர்தர பரீட்சையில் முதல் நிலை வகித்த மாணவர்களுக்கும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

குறித்த நிகழ்வில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்;, பெற்றோர், பழைய மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .