2025 ஜூலை 05, சனிக்கிழமை

தொழில் மற்றும் கல்விச் சந்தை

George   / 2016 ஜூலை 21 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு மாவட்ட செயலகம், தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் பெரண்டினா தொழில் வள நிலையம் என்பன இணைந்து ஏற்பாடு செய்துள்ள 'முல்லை விடியல்'  என்னும் தொழில் மற்றும் கல்விச் சந்தை, எதிர்வரும் 28 ஆம் திகதி முல்லைத்தீவு மகா வித்தியாலய வளாகத்தில் இடம்பெறவுள்ளது.

காலை 9 மணிக்கு ஆரம்பமாகும் தொழில் மற்றும் கல்விச் சந்தை, மாலை 4 மணி வரையில் நடைபெறும்.

500 தொழில் வாய்ப்புக்கள் மற்றும் உயர் கல்வி வாய்ப்புக்கள் என்பவற்றை பெற்றுக்கொள்ள மற்றும் அறிந்து கொள்வதற்கும் முன்னணி நிறுவனங்களின் அதிகாரிகளுடன் கலந்துரையாட இந்த நிகழ்வு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர், யுவதிகள் சுயவிவரக்கோவை மற்றும் சான்றிதழ்களுடனும் வருகைதந்து, தொழில்வாய்ப்பினையும் உயர்கல்விக்கான வழிகாட்டல்களையும் பெற்றுக்கொள்ளுமாறு முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் கேட்டுக்கொண்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .