2025 நவம்பர் 11, செவ்வாய்க்கிழமை

’தகுதிவாய்ந்த ஒருவரை நியமிக்கவும்’

Niroshini   / 2021 ஜூலை 21 , பி.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

 

நியமனம் என்பது நிச்சயமாக எதிர்கால அபிவிருத்திக்கு உகந்தது அல்ல என்பதை சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் புரிந்துகொண்டு, அரசாங்கத்திடம் இந்த விடயங்களை எடுத்து கூறி, வடமாகாண பிரதம செயலாளராக சியமிக்கப்பட்டுள்ளவரை மாற்றி, தகுதிவாய்ந்த ஒருவரை நியமிக்க வேண்டும் என, ஈ.பி.ஆர்.எஸ்.எப் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

 

கிளிநொச்சி ஊடக மையத்தில், இன்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், பல அனுபவம் வாய்ந்தவர்கள் இங்கு இருக்கின்ற நிலையில், சகல நியமங்களையும் கடந்து விருப்பம் இல்லாத ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார் எனவும் அவர் வவுனியாவிலிருந்து அநுராதபுரத்துக்கு இடமாற்றம் கேட்டதாகவும் ஒரு செய்தி அடிபடுவதாகவும்; கூறினார்.

 

'இவ்வாறான நியமனம் என்பது வேலைகளை பின்னடைய செய்யும் என்பதுடன், அபிவிருத்திகளையும் பின்னடைய செய்யும். மொழி என்பது முக்கியமான விடயம். ஆகவே 95 வீதம் தமிழ் மக்களைக் கொண்ட மாகாணத்தில் இவ்வாறான நியமனம் என்பது, சகல விடயங்களையும் பின்னூக்கி நகர்த்துவதாகவே இருக்கும்.

'எனவே, இந்த நியமனம் என்பது மீள் பரிசீலணைக்கு உள்ளாக்கப்பட வேண்டும்' என்றும், சுரேஷ் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X