2025 ஜூலை 21, திங்கட்கிழமை

தங்கத்தை தேடிய வேட்டை முறியடிப்பு; எழுவர் கைது

Editorial   / 2022 ஜனவரி 25 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.தமிழ்ச்செல்வன், சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டம், இராமநாதபுரம் பகுதியில் புதையல் அகழ்வதற்காக இரண்டு வாகனங்களில் சென்ற ஏழு பேர் கொண்ட குழுவினர்,  வட்டக்கச்சி  பொலிஸ் சோதனைச் சாவடியில் நேற்று முன்தினம் (23) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து புதையல் அகழ்வுக்குப்  பயன்படுத்தப்படும் ஸ்கானர் இயந்திரம் மற்றும்  ஏனைய சில பொருள்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

கைதானவர்களில் ஒருவர் பொலிஸ் கான்ஸ்டபிள் என்றும் தெரியவந்துள்ளது.

அத்துடன், இராமநாதபுரம், சம்புக்குளம் பகுதியில் புதையல் அகழ்வதற்காக தென்னிலங்கையிலிருந்து இவர்கள் வந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த பகுதியில் இதற்கு முன்னரும் புதையல் தோண்டும் முயற்சியில் ஈடுப்பட்ட பலர்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

விடுதலைப் புலிகளின் தங்கம் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற தகவலின் அடிப்படையில் அவற்றை அகழ்வதற்கான முயற்சிகள் பல தடவைகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X