2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தங்கம் அகழ்வு பணி நிறைவு: அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவு

Niroshini   / 2021 டிசெம்பர் 07 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-செ. கீதாஞ்சன், சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு - சுதந்திரபுரம் பகுதியில், தமிழீழ விடுதலைப் புலிகளின் தங்கம் புதைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணி, நேற்று  (06) மாலை நிறைவுக்கு வந்துள்ளதுடன், அது தொடர்பில் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு, முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் ரி.சரவணராஜா உத்தரவிட்டுள்ளார்.


 சுதந்திரபுரம் பகுதியில், தமிழீழ விடுதலைப் புலிகளின் தங்கம் புதைக்கப்பட்டுள்ளதாக, முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில், புதுக்குடியிருப்பு பொலிஸாரால் வழக்கு தொடரப்பட்டது.

 அது தொடர்பில், நீதிமன்ற உத்தரவுக்கு அமைய தோண்டும் நடவடிக்கைகள்,டிசெம்பர் 3ஆம் திகதி,  தொடக்கப்பட்டு, மறுநாள் 4ஆம் திகதியும் மேற்கொள்ளப்பட்டு, இயந்திரங்கள் புதைந்த காரணத்தினால், நேற்று  (06) வரை ஒத்திவைக்கப்பட்டது.
 
இந்நிலையில், நேற்று (06), மீண்டும், மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் ரி.சரவணராஜா முன்னிலையில் தோண்டும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. பொலிஸார், ,நீதிமன்ற உத்தியோகத்தர்கள், கிராமஅலுவலகர்கள், படையினர், சிறப்பு அதிரடிப்படையினர், வைத்தியசாலை நிர்வாகத்தினர் உள்ளிட்டவர்கள், குறித்த பகுதியில் பிரசன்னமாகியிருந்தனர்.

 
தோண்டப்டப்ட கிடங்குகளில் தண்ணீர் நிரம்பிக் காணப்படுவதால், தண்ணீரை இறைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு, தொடர்ந்து கனரக இயந்திரம் கொண்டு, சுமார் பத்து அடி ஆழம் வரையில் தோண்டப்பட்டுள்ளது.

இதன்போது,  குறித்த பகுதியில் எதுவித பொருள்களும் கிடைக்காத நிலையில், மாலை 5.15 மணிளவில், அகழ்வு பணியை, நீதவான் நிறைவுக்கு கொண்டு வந்ததார்.

அத்துடன், இதன்போது எடுக்கப்பட்ட சில சான்று பொருள்களை நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறும், இரண்டு குழிகளையும் தோண்டியவர்கள் யார் என்று புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணை செய்து, நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும், புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு, நீதவான் கட்டளை பிறப்பித்துள்ளார்.

மேலும், இது குறித்த வழக்கு விசாரணை, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 25ஆம் திகதி, முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .