Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Editorial / 2019 மார்ச் 27 , பி.ப. 03:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப்புலிகள் வழங்கிய கட்டடம் மற்றும் காணியை மீளவும் கோர முடியாது என வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
2009 முதல் தாங்கள் பயன்படுத்திய ஊடக இல்ல கட்டடத்தையும் காணியையும் மீளவும் பெற்றுத் தருமாறு கிளிநொச்சி ஊடக அமையும் இன்று (27) கிளிநொச்சியில் இடம்பெற்ற ஆளுநரின் மக்கள் சந்திப்பு நிகழ்வில் கலந்துகொண்டு கோரிக்கை விடுத்த போதே ஆளுநர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஊடக இல்லத்தின் காணியையும் கட்டடத்தையும் இராணுவம் இதுவரை விடுவிக்கவில்லை. எனவே இராணுவத்திடம் சென்று ஏன் விடுவிக்கவில்லை என்று கேட்டறியுமாறும் தெரிவித்த ஆளுநர், காணிக்கான ஆவணங்கள் என்ன இருக்கிறது என்றும் கோரினார்.
இதற்கு பதிலளித்த ஊடக அமையத்தின் நிர்வாகம், இறுதி யுத்தம் காரணமாக குறித்த காணிக்கான ஆவணத்தை இழந்திருந்தோம். அத்தோடு அன்றைய சூழலில் விடுதலைப்புலிகள் நிர்வாகத்தில் குறித்த கட்டடம் ஊடக இல்லமாக கிளிநொச்சி ஊடகவியலாளர்களால் பயன்படுத்தப்பட்டு வந்தது. என்பதனை சுட்டிக்காட்டிய போது, தடை செய்யப்பட்ட இயக்கம் வழங்கியதை மீளவும் கோர முடியாது என ஆளுநர் பதிலளித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago