Niroshini / 2020 டிசெம்பர் 23 , மு.ப. 11:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள தண்ணிமுறிப்பு குளத்தின் அணைக்கட்டு உடைப்பெடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தண்ணிமுறிப்பு குளத்தின் அணைக்கட்டு உள் பக்கமாக 200 மீற்றர் தூரத்துக்கு அரிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்தே, அணைக்கட்டு உடைப்பெடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, குளத்தைப் பாதுகாப்பதற்காக, தற்காலிகமாக மண்மூடைகள் போடப்பட்டு, பாதுகாப்பு வேலி அமைக்கும் வேலைத்திட்டத்தை நீர்ப்பாசனத் திணைக்களத்தினர் முன்னெடுத்து வருகின்றனர்.
இந்தக் குளக்கட்டுக்கு முழுமையாக அலைக்கல்லு போடாததன் காரணமாகவே, இவ்வாறு அரிப்பு ஏற்பட்டுள்ளது.
தண்ணிமுறிப்பு குளமானது 21 அடி வரை நீரை சேமிக்க கூடியதாக இருக்கின்ற நிலையில், தற்போது 20.3 அடி வரை நீர் மட்டம் உயர்ந்த நிலையில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025