2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

தந்தை செல்வாவின் 119ஆவது பிறந்த தினம் அனுஸ்டிப்பு

Gavitha   / 2017 ஏப்ரல் 01 , மு.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன்

தந்தை செல்வநாயகம் என அழைக்கப்படும், தமிழரசுக்கட்சியின் தலைவரான செல்வநாயகத்தின் 119ஆவது பிறந்ததினம், நேற்று (31) வவுனியா நகர மத்தியில்,  உள்ள அன்னாரது சிலையடியில், வட மாகாண சுகாதார அமைச்சரும் தமிழரசுக்கட்சியின் வவுனியா கிளை தலைவருமான ப. சத்தியலிங்கத்தின் தலைமையில் இடம்பெற்றது.

காலை 9 மணிக்கு இடம்பெற்ற இந்நிகழ்வில், அன்னாரது சிலைக்கு மலர் மாலை அணிவத்ததுடன், மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இதன்போது தமிழரசுக்கட்சியின் வவுனியா கிளை உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .