2025 ஜூலை 07, திங்கட்கிழமை

தனிநபரின் காணியை பாடசாலைக்கு வழங்க தீர்மானம்

George   / 2016 செப்டெம்பர் 17 , மு.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி பூநகரி வலைப்பாடு பாடசாலை காணியின் ஒருபகுதியினை தனிநபர் ஒருவர் உரிமை கோரிய நிலையில், தனிநபர் உரிமை கோரிய காணியினை பாடசாலைக்கு வழங்குவதற்கான முயற்சிகளை பூநகரிப் பிரதேச செயலகம் மேற்கொண்டுள்ளது.

தனிநபர், காணியினை உரிமை கோரி வந்ததன் காரணமாக பாடசாலையின் அபிவிருத்திப் பணிகள் பாதிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், கடந்த 13ஆம் திகதி பூநகரிப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இவ்விடயம் ஆராயப்பட்டது.

இதன்போது, தனிநபருக்கான காணியினை பிறிதொரு இடத்தில் எப்போதும் வழங்கலாம். ஆனால் பாடசாலையினை அபிவிருத்தி பாதிக்கின்ற வகையில் தடைகள் இருக்கக்கூடாது. பாடசாலைக்கு குறித்த காணியினை வழங்கலாமென முடிவுகள் எடுக்கப்பட்ட நிலையில் தற்போது பூநகரிப் பிரதேச செயலகம் பாடசாலைக்கு காணியினை வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .