2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

’தனிநபர்களுக்கு கொடுப்பனவுகள் இல்லை’

Niroshini   / 2020 டிசெம்பர் 23 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-விஜயரத்தினம் சரவணன்

கொடுப்பனவுகள் வழங்கப்படும்போது, தனிபர்கள் புறக்கணிக்கப்படுவதாகத் தெரிவித்த மாந்தை கிழக்குப் பிரதேசசெயலர் ந.ரஞ்சனா, எனவே அவர்களுக்கு விசேடமாக வேறேதேனும் கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.

நேற்று (22) நடைபெற்ற மாந்தை கிழக்குப் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், எல்லாவிதமான உதவித் திட்டங்களிலும் இருந்தும் தனி நபர்கள் புறக்கணிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.

குறிப்பாக எந்தவோர் உதவித் திட்டத்திலும், குடும்ப உறுப்பினர்களின் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்படுவதாகத் தெரிவித்த அவர், ஆனால் தனிநபர்களுக்கு புள்ளிகள் இல்லை எனவும் அவர்களுக்கான கொடுப்பனவுகளும் வழங்கப்படுவதில்லை எனவும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .