2025 மே 09, வெள்ளிக்கிழமை

தனிமைப்படுத்தல் நிலையத்தில் போராட்டம்

Niroshini   / 2021 ஜூலை 11 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன், செ.கீதாஞ்சன்

கொத்தலாவல சட்டத்தை உடன் கிழித்தெறியுமாறு கோரி, கேப்பாப்புலவு விமானப்படை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட தேரர்கள் இருவர் மற்றும் இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டவர்களால், போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகச் சட்டமூலத்துக்கு எதிராக, பாராளுமன்ற சுற்றுவட்டத்துக்கு அண்மையில், வியாழக்கிழமை (08) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இலங்கை ஆசிரியர் சங்க தலைவர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட  33 பேர் கைது செய்யப்படடு பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டவர்களில்,  தேரர்கள் இருவர் மற்றும் இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 11 பேர் கேப்பாப்புலவு தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இவர்கள் தனிமைப்படுத்தல் முகாமில் கொத்தலாவல சட்டத்தை உடன் கிழித்தொறியுமாறு கோரி, நேற்று (10) போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

'கொத்தலாவ சட்டத்தினை உடன் கிழித்தெறி' என்று தமிழில் சிங்களமொழில் எழுதப்டப்ட வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு, தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X