Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 19 , பி.ப. 03:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
தனியார் பஸ் உரிமையாளர்களால் முன்னெடுக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டம், வவுனியா மாவட்டச் செயலாளர் வழங்கிய வாக்குறுதியை அடுத்து, தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக, வவுனியா மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர் சங்கத் தலைவர் தெரிவித்தார்.
வவவுனியா புதிய பஸ் நிலையத்தில், இணைந்த நேர அட்டவனை மற்றும் மாகாணங்களுக்கிடையிலான பஸ்களை உட்செல்ல அனுமதிக்கக் கூடாது ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து, இன்று (19) நள்ளிரவு முதல், வடமாகாணத்தின் தூர இடங்களுக்கான பஸ் சேவைகள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தன.
இந்நிலையில் இன்று மாலை வவுனியா மாவட்டச் செயலாளருக்கும் தனியார் பஸ் உரிமையாளர் சங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையில் கலந்துரையடலொன்று நடைபெற்றது.
இதன்போது, இணைந்த நேர அட்டவணையை இரு வாரங்களுக்குள் நடைமுறைப்படுத்துவதற்கு ஆவண செய்வதாகவும், இது தொடர்பாக முதலமைச்சரின் செயலாளருடன் தான் கலந்துரையாடியதாகவும் இதற்கு மேலதிகமாக மாகாணங்களுக்கிடையிலான பஸ்கள் புதிய பஸ் நிலையத்துக்கு முன்பாகவோ அல்லது உட் செல்லவோ அனுமதிக்கப்படாதெனவும், மாவட்டச் செயலாளர் உறுதியளித்தார்.
மாவட்டச் செயலாளரின் மேற்கண்ட வாக்குறுயை அடுத்து, போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக, தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் எஸ்.ரி.இராஜேஸ்வரன் தெரிவித்தார்.
13 minute ago
32 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
32 minute ago
1 hours ago
2 hours ago