Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 10, சனிக்கிழமை
Editorial / 2018 ஜூன் 17 , பி.ப. 07:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர்கள் முன்னெடுத்து வந்த பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டம், முதலமைச்சரின் அமைச்சின் செயலாளர் விஜயலட்சுமி கேதீஸ்வரன் வழங்கிய உறுதிமொழிக்கமைய, இன்று (17) மாலை நிறைவுக்கு வந்தது.
மாலை 4 மணியளவில், முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன் போராட்டம் நடத்திய பஸ் உரிமையாளர்கள், சாரதிகள், நடத்துநர்களை சந்தித்த முதலமைச்சர் அமைச்சின் செயலாளர் விஜயலட்சுமி கேதீஸ்வரன்,
உங்களது பிரச்சினைகளை விளங்கி கொண்டுள்ளோம் எமக்கு உடனடியாக தீர்வு தர முடியாது. எனவே, எமக்கு இரண்டு வார கால அவகாசம் வழங்கி, பொதுமக்களின் நலன்கருதி சேவைகளை முன்னெடுக்குமாறும் இரண்டு வாரத்துக்குள் உங்களது பிரச்சனைக்கு தீர்வு வழங்குவதாகவும் உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது
இதனை தொடர்ந்து கருத்து தெரிவித்த முல்லைத்தீவு மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர் சங்க செயலாளர்,
குறித்த உறுதிமொளிக்கமைய, போராட்டம் நிறுத்தப்பட்டதாகவும் தமது சேவைகள் நாளை வழமை போன்று இடம்பெறும் என்றும் தமது போராட்டத்துக்கு ஆதரவு வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக தெரிவித்தார்
அத்தடன், தொடர்ந்து இரண்டு வாரங்களுள் தீர்வு இல்லையேல், உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்
இதேவேளை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வெடிகொளுத்தி ஆரவாரத்தில் ஈடுபட்டு, போராட்டத்தை கைவிட்டுச் சென்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago