Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 19 , பி.ப. 01:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து தனியார் பஸ் உரமையாளர்களும், இன்று (19) நள்ளிரவு முதல் பணிபகிஸ்கரிப்புப் போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.
வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சரும் முதலமைச்சருமான சி. வி. விக்னேஸ்வரன் தலைமையில் இலங்கைப் போக்குவரத்துச் சபையின் உயர் அதிகாரிகளுக்கும் தனியார் பஸ் உரிமையாளர் சங்கப் பிரதிநிகள் மற்றும் அதிகாரிகளுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட முடிவுகளான இணைந்த நேர அட்டவணையை இதுவரையில் நடைமுறைப்படுத்தாமைக்கும், மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவைகள் புதிய பஸ் நிலையத்துக்குள் வருவதை தடைசெய்வதற்கான நடவடிக்கைகளை 31.12.2017இல் இருந்து நடைமுறைப்படுத்தாமைக்கும் எதிர்ப்புத் தெரிவித்தே, இப்பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்தப் பணிப்பகிஷ்கரிப்புக் காரணமாக, அனைத்து வெளி மாகாணங்களுக்கிடையிலான பஸ்களும், வவுனியா மத்திய பஸ் நிலையத்தில் தரித்து நின்றன.
இருப்பினும், உள்ளூர் சேவைகள் அனைத்தும் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
17 minute ago
36 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
36 minute ago
1 hours ago
2 hours ago