2025 ஜூலை 07, திங்கட்கிழமை

தயா மாஸ்டரின் குற்றப்பத்திரிகையில் ‘குற்றம் பிழையாக சொல்லப்பட்டுள்ளது’

George   / 2016 செப்டெம்பர் 30 , மு.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.அகரன்  

“தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டரிடம் கையளிக்கப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையிலே சொல்லப்பட்டுள்ள குற்றம், 7ஈ என்ற குற்றமாக சொல்லப்பட்டுள்ளது. ஆனால், அது பிழை” என அரச தரப்பு சட்டத்தரணி தெரிவித்ததாக தயா மாஸ்டர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.  

வவுனியா மேல் நீதிமன்றத்தில், தயா மாஸ்டருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு, நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையை அடுத்து, ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த சுமந்திரன், மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்தும் கருத்துரைத்த அவர், “தயா மாஸ்டருக்கு எதிரான வழக்கின் போது, நான் பூர்வாங்க ஆட்சேபனையை எழுப்பி வாதிட்டிருந்தேன். அவருக்கு எதிரான குற்றப்பத்திரிகை சட்டவலு அற்றதென்றும் அதில் இவர் செய்ததாக சொல்லப்பட்ட விடயம், சட்டத்தின் பிரகாரம் ஓர் குற்றம் அல்ல என்றும், அவசரகால விதிமுறைகளாக சொல்லப்படுகின்ற விதிமுறைகள், அவசரகால விதிமுறைகள் அல்ல என்றும் அவை பொது பாதுகாப்பு பிரிவின் 5 ஆம் கட்டளை சட்டத்துக்கு அப்பாற்பட்டதென்றும் கூறினேன். இந்நிலையில், இந்த வழக்கு, எதிர்வரும் நவம்பர் 18ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .