2025 ஜூலை 02, புதன்கிழமை

தரிசாகக் கிடக்கு வயல் நிலத்தை பயிர்ச்செய்கைக்கு அனுமதிக்கவும்

Princiya Dixci   / 2016 ஜூன் 06 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி, அக்கராயன்குளத்தின் கீழ் காணப்படும் 54 ஏக்கர் வயல் நிலத்தில், பயிர்;ச் செய்கையை மேற்கொள்ள அனுமதி வழங்குமாறு, கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகத்திடம், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அக்கராயன்குள நீர்ப்பாசனம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே, குறித்த வயல் நிலத்துக்கான நீர்ப்பாசன வாய்க்கால்கள் உருவாக்கப்படவில்லை. அதன் காரணமாகவே, மேற்படி வயல்நிலம், தரிசு நிலமாக காணப்படுகின்றது.

கடந்த காலங்களில் நடைபெற்ற விவசாயக் கூட்டங்களிலும் பயிர்ச்செய்கை தொடர்பான கூட்டங்களின் போதும், மேற்படி வயல்நிலம் தொடர்பான பிரச்சினை எழுப்பப்பட்டிருந்தது.

இருப்பினும், அந்த வயல்நிலத்தினை பயிர்ச்செய்கைக்கு உட்படுத்துவதற்கு இதுவரையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. வெகு விரைவில் இது தொடர்பான தீர்மானமொன்i எட்டுமாறு, மாவட்ட செயலாளரிடம், விவசாயிகள், கோரிக்கை விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .