Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 செப்டெம்பர் 16 , பி.ப. 01:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னாரில், அரச போக்குவரத்துச் சேவையை மேற்கொள்வதற்காக, மன்னார் நகர சபையால் தற்காலிகமாக வழங்கப்பட்ட இடம், மன்னார் நகர சபை தவிசாளர் ஞானப்பிரகாசம் அன்டனி டேவிட்சனின் தலைமையில், நேற்று (15) இரவு மூடப்பட்டுள்ளது.
மன்னாரில் இருந்து அரச போக்குவரத்துச் சேவையை மேற்கொள்வதற்காக, மன்னார் நகர சபையால் இடம் வழங்கப்பட்டிருந்தது. எனினும், மன்னார் நகர சபையின் புதிய பஸ் தரிப்பிட பணிகள் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டு, மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.
இவ்வாறு அமைக்கப்பட்ட இந்தப் பஸ் தரிப்பிடத்தில் அரச மற்றும் தனியார் சேவைகள் இணைந்த சேவையாக மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நிலையில் தனியார் போக்குவரத்துச் சேவைகள் மாத்திரம் இடம்பெற்று வந்தன. எனினும், இலங்கை போக்குவரத்து பஸ் சேவையினர், மன்னார் நகர சபையிடம் கால அவகாசம் கோரி, தற்காலிகமாக வழங்கப்பட்ட இடத்தில் பஸ் சேவைகளை மேற்கொள்ளப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில், அவர்கள் கோரியிருந்த கால அவகாசம் முடிவடைந்ததால், அரச போக்குவரத்துச் சேவையை மேற்கொள்வதற்குத் தற்காலிகமாக வழங்கப்பட்ட இடத்தை, மன்னார் நகர சபை, நேற்றிரவு மூடியுள்ளது.
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago