2025 மே 09, வெள்ளிக்கிழமை

தலைமன்னாரில் பிசிஆர் பரிசோதனை முன்னெடுப்பு

Niroshini   / 2021 ஜூன் 30 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மாவட்டத்தில் முடக்கப்பட்டுள்ள தலைமன்னார் பியர் மேற்கு, பியர் கிழக்கு ஆகிய இரு கிராம அலுவலர் பிரிவுகளிலும், நேற்றும் (29) இன்றும் (30), பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

கடந்த வெள்ளிக்கிழமையன்று (25), தலைமன்னார் பியர் பகுதியில், 62 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், குறித்த இரு கிராம அலுவலகர் பிரிவுகளும் மறு அறிவித்தல் வரை முடக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை. மன்னார் சுகாதார வைத்திய அதிகாரிகள் பணிமனை ஆகியன இணைந்து, மடக்கப்ட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு, பிசிஆர் பரிசோதனைகளை முன்னெடுத்தனர்.
 
இதன்போது, 368 பேரின் பிசிஆர் பரிசோதனைகளுக்கான மாதிரிகள் பெறப்பட்டுள்ள நிலையில், அவை கொழும்பு - முல்லேரியா வைத்தியசாலைக்கு பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன

அனுப்பி வைக்கைப்பட்ட மாதிரிகளில், தொற்றுறுதி செய்யப்படும் நபர்களின் முதல் நிலை தொடர்பாளர்களுக்கு, பிசிஆர் பரிசோதனைகள் விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X