Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 10, சனிக்கிழமை
Niroshini / 2021 ஜூன் 24 , பி.ப. 12:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன், நடராசா கிருஸ்ணகுமார்
வவுனியா நகர சபை தவிசாளர் கை செய்யப்பட்ட சம்பவத்துக்கு எதிராக, மன்னார் நகர சபையில், நேற்று (23) கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
மன்னார் நகர சபையின் 40ஆவது அமர்வு, தவிசாளர் அன்டனி டேவிற்சன் தலைமையில்;, நேற்று (23) நடைபெற்றது.
இதன்போது, ஜுன் 15ஆம் திகதியன்று, வவுனியா நகரசபை தவிசாளர்; கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, மன்னார் நகர சபை உறுப்பினரான சம்பூர்ணம் இரட்ணசிங்கத்தால் முன்வைக்கப்பட்ட பிரேரணையொன்று, சபையில் முன்வைக்கப்பட்டது.
இதையடுத்த, இந்தப் பிரேரணை ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, கண்டன தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.
இதன்போது எரையாற்றிய நகர சபை உறுப்பினர் சம்பூர்ணம் இரட்ணசிங்கம், வவுனியா நகரசபை தவிசாளரின் கைது நடவடிக்கை என்பது மக்கள் ஆணையை பெற்றவர்களின் அதிகாரத்தை பறிக்கின்ற செயற்பாடாகுமென்றார்.
மக்கள் ஆணை பெற்ற மக்கள் பிரதிநிதியின் அதிகாரத்தையும் அரச ஊழியர்களின் கடமையையும் செய்யவிடாது தடுத்தமை, ஜனநாயகத்தை கேள்விக்குட்படுத்தும் விடயமாக உள்ளது என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago