Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 டிசெம்பர் 24 , பி.ப. 02:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியா, ரயில் நிலைய வீதியில், சாரதி இன்றி மினிபஸ் ஒன்று ஓடியதால், மக்கள் பதற்றத்துடன் வீதியில் இருந்து நாலாபுறமும் தப்பி ஓடிய சம்பவம் ஒன்று, நேற்று (23) மாலை 6 மணியளவில் இடம்பெற்றது.
வவுனியா, ரயில் நிலைய வீதி வழியேச் சென்ற குறித்த மினி பஸ் சாரதி, அங்கிருந்த அரச வங்கி ஒன்றுக்கு முன்னால் பஸ்ஸை நிறுத்தி, வங்கிக்குள் சென்றுள்ளார்.
இதன்போது குறித்த பஸ் சாரதி இன்றி அவ்விடத்தில் இருந்து ரயில் வீதி நோக்கி நகர்ந்து சென்று எதிரே வந்த கார் மற்றும் மோட்டர் சைக்கிள்களுடன் மோதி விபத்துக்குள்ளாகி, தொடர்ந்தும் முன்னோக்கிச் சென்றுள்ளது.
சாரதி இன்றி குறித்த மினிபஸ் வீதியில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் பயணிப்பதை அவதானித்த அவ்வீதியால் பயணித்தோர், தமது வாகனங்களுடன் நாலா புறமும் சிதறி ஓடினர். சுமார் 50 மீற்றர் தூரம் வரை பயணித்த குறித்த மினிபஸ்ஸை, பலர் ஒன்று சென்று தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இதன்போது ஏற்பட்ட விபத்தில், எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.
8 minute ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
4 hours ago
5 hours ago
5 hours ago