Niroshini / 2021 டிசெம்பர் 08 , பி.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன், செ.கீதாஞ்சன்
வரலாற்று சிறப்புமிக்க ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் கோவில் உண்டியல், நேற்று (07) இரவு உடைக்கப்பட்டுள்ளது.
இதன்போது, உண்டியலில் இருந்த பணம் திருடப்பட்டுள்ளது.
கோவில் பாதுகாப்பாக பூட்டப்பட்ட வேளை, மணிகோபுரம் ஊடாக ஏறி கோவிலுக்குள் இறங்கிய திருடன், கோவில் மண்டபத்தில் மூலவருக்கு நேராக வைக்கப்பட்ட உண்டியலை எடுத்துக்கொண்டு, வைரவர் சன்னிருக்கு அருகில் உள்ள ஓடையில் இருந்த இரும்பு கம்பியால் உடைத்து, உண்டியலில் உள்ள பணங்களை திருடிக்கொண்டு சென்றுள்ளான்.
கோவிலில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டிவி கமெராவில், திருடனின் வருகை பதிவாகியுள்ளது.
இந்நிலையில், கோவில் நிர்வாகத்தினர் பொலிஸ் முறைப்பாடு பதிவுசெய்த நிலையில், ஒட்டுசுட்டான் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
தான்தோன்றீஸ்வரர் கோவிலின் இராஜகோபுர கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் இந்த வேளையில் கொள்ளைச் சம்பவம் பதிவாகி உள்ளதுடன், கடந்த ஒரு மாத காலமாக உண்டியலில் உள்ள பக்தர்களின் காணிக்கைகள் எடுத்துக் கொள்ளளப்படவில்லை என, நிர்வாகம் தெரிவித்துள்ளது.
8 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
9 hours ago