Niroshini / 2020 டிசெம்பர் 28 , பி.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியா - பறண்நட்டகல் பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து, தாய் ஒவரும் அவரது மூன்று வயது பிள்ளையும் ஓமந்தை பொலிஸாரால் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரும் நேற்றையதினம் அவர்களது வீட்டில் இருந்துள்ளனர். எனினும் இரவு 12 மணியவிளவில் காணாமல்போயிருந்த நிலையில், ஊர்மக்கள் மற்றும் உறவினர்கள் அவர்களை தேடியுள்ளனர்.
இந்நிலையில் இன்றையதினம் காலை, வீட்டுக்கு அருகில் இருந்த வயல்வெளி கிணறு ஒன்றில் இருந்து, அவர்கள் இருவரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர்கள், அதே பகுதியை சேர்ந்த ரமேஸ் ஜெயலலிதா வயது - 42, மற்றும் அவரது மூன்று வயது மகளான றிதுர்சனா ஆகியோர் ஆவர்.
சடலங்கள், உடற்கூற்று பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025