Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 10, சனிக்கிழமை
Niroshini / 2021 ஜூன் 22 , பி.ப. 01:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன், சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, கோம்பாவில், திம்பிலி பகுதியில் உள்ள காடுகள் அழிக்கப்பட்டு, அங்குள்ள காணிகள் அபகரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், 8 பேர், இன்று (22) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
புதுக்குடியிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர் என, புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
பயணக் கட்டுப்பாடு அமலில் இருந்த வேளையில், திம்பிலி குளத்துக்குச் சொந்தமான பகுதி மற்றும் அதனை அண்டிய காட்டுப்பகுதிகள், கனரக இயந்திரம் கொண்டு அழிக்கப்பட்டு, அங்குள்ள அரச காணிகள் அபகரிக்கப்பட்டன.
இந்தச் சம்பவம் தொடர்பில், கோம்பாவில் கிராம சேவையாளரால் 8 பேர் அடையாளப்படுத்தப்பட்ட, புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று (22), அடையாயப்படுத்தப்பட்ட நபர்கள், பொலிஸ் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்த நிலையில், கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்களை, முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago