2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

‘தியாகிகள் தினத்தை நினைவு கூர ஏற்பாடு’

Editorial   / 2019 ஜூன் 14 , பி.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

ஈழ மக்கள் புரட்சிகர முன்னனியின் ஸ்தாபகத் தலைவர் தோழர் பத்ம நாபாவின் 29ஆவது ஆண்டு தியாகிகள் தினம், எதிர்வரும் 19ஆம் திகதி புதன்கிழமை வடக்கு - கிழக்கில் மிகவும் அமைதியான முறையில் நினைவு கூறப்பட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் பொருளாளரும் மன்னார் மாவட்ட அமைப்பாளருமான எஸ்.ஆர்.குமரேஸ், இன்று (14) தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் தொடர்ந்து கருத்துரைத்த அவர், வடக்கு - கிழக்கும் மற்றும் புலம் பெயர்ந்த நாடுகளில் தியாகிகள் தினம் நினைவு கூறப்படுகின்றமை வழமையாகுமெனவும் எனினும், நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ் நிலையைக் கருத்தில் கொண்டு, தியாகிகள் தினமானது வடக்கு - கிழக்கில் உள்ள மாவட்டங்கள் தோரும் ஈழ மக்கள் புரட்சிகர முன்னனியின் (ஈ.பி.ஆர்.எல்.எப்) கட்சியின் அலுவலகங்களில் தோழர்கள், ஆதரவாளர்களை ஒன்றிணைத்து தியாகிகள் தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

மாவட்ட பொறுப்பாளர்களின் தலைமையில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் தியாகிகள் தினம் நினைவு கூறப்படவுள்ளதாகத் தெரிவித்த அவர், குறித்த தியாகிகள் தின நினைவு நிகழ்வில் யாழ்ப்பாணத்தில், கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன், வவுனியாவில், கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன், கிளிநொச்சியில், கட்சியின் உப செயலாளரும் முன்னாள் வடமாகாண கல்வி அமைச்சருமான சர்வேஸ்வரன், மட்டக்களப்பில் கட்சியின் உப தலைவர் துரைரெட்ணம், மன்னாரில் கட்சியின் பொருளாளர் எஸ்.ஆர்.குமரேஸ் ஆகிய நானும் கலந்துகொள்ளவுள்ளதாகவும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .