2025 மே 09, வெள்ளிக்கிழமை

திஸ்ஸவிதாரன எம்.பியுடன் சந்திப்பு

Niroshini   / 2021 ஜூலை 21 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நடராசா கிருஸ்ணகுமார்

முன்னாள் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சரும்  பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் திஸ்ஸவிதாரன, ஜனநாயக இளைஞர் அமைப்பினர் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று, திஸ்ஸவிதாரன இல்லத்தில், அண்மையில் (17)  நடைபெற்றது.

ஜனநாயக இளைஞர் அமைப்பின் அரசியற்குழு தலைவரும் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினருமான ஆறுமுகம் ஜோன்சன் மற்றும் பொதுச்செயலாளர் கோபாலபிள்ளை மிதுஜன் ஆகியோர், இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

சந்திப்பின் போது வடக்கு - கிழக்கு மற்றும் மலையகம் தலைநகர் பகுதிகளில் மேற்கொள்ளப்படவுள்ள  அபிவிருத்தித்திட்டங்கள்,  வேலைவாய்ப்புகள்  மற்றும் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றிலிருந்து மக்களை மீட்டெடுத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன.

அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர்  திஸ்ஸவிதாரனவால் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்ட கொரோனா ஒழிப்பு வழிகாட்டி கையேடு, ஜனநாயக இளைஞர் அமைப்பினருக்கு  வழங்கப்பட்டது.

அதுமட்டுமன்றி சர்வதேச தரத்திலான ஒரு தொகை முகக்கவசங்கள் இளைஞர் அமைப்பினருக்கு அன்பளிப்புச்செய்யப்பட்டது.

விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் அமைச்சரவை மாற்றத்தின் போது பேராசிரியர்  திஸ்ஸவிதாரனவுக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X