Niroshini / 2021 ஜனவரி 11 , பி.ப. 02:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியா - அரசமுறிப்பில், துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி, படுகாயமடைந்த நிலையில், நபர்; ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுள்ளார்.
29 வயதான தேவராசா ஜெயசுதன் என்பவரே, இவ்வாறு துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.
குறித்த நபருக்கும் அவரது மனைவிக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையறிந்த குறித்த பெண்ணின் சித்தப்பா, வீட்டுக்கு வந்து. குறித்த நபரை துப்பாக்கியால் சுட்டதுடன், விறகு கட்டையாலும் சரமாரியாகத் தாக்குதல் நடத்தியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக அப்பகுதி மக்களால் ஒமந்தை பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டதை அடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், சம்பவத்துடன், தொடர்புடைய நபரை கைதுசெய்தனர்.
அத்துடன், அவரிடம் இருந்து நாட்டு துப்பாகி ஒன்றையும, பொலிஸார்; கைப்பற்றியுள்ளனர்.
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025