2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

தென்பகுதி கடற்தொழிலாளர்களால் வடக்கின் கடல் வளம் பாதிப்பு

Editorial   / 2019 ஜூன் 26 , பி.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


- செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோபகுதிகளில் தங்கியிருந்து தொழில் செய்துவரும் தென்பகுதியினை சேர்ந்த கடற்தொழிலாளர்களால் கடல் வளங்களும் பாதிக்கப்படுகின்றது என சுண்டிக்குளம் கடற்தொழிலாளர்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகளிடம் மனுகையளித்துள்ளார்கள்.

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேசத்திற்கு உட்பட்ட சாலைப்பகுதியில் தங்கியுள்ள தென்னிலங்கை கடற்தொழிலாளர்கள் சமார் 500ற்கும் மேற்பட்ட படகுகள் வைத்து தொழில் செய்து வருகின்றார்கள்.

இவர்களுக்கான தொழில் அனுமதி கடற்தொழில் அமைச்சினால் கொடுக்கப்பட்ட போதும் அட்டை பிடிப்பு என்ற பெயரில் அனுமதியினை பெற்று சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபடுவதால் வடக்கில் முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் வடமராசட்சி கிழக்கு கடற்தொழிலாளர்கள் அதிகளவில் பாதிக்கபப்ட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

இவ்வாறான சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கை கட்டுப்படுத்தப்படாவிடின் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் மாவட்டத்தினை ஒன்றிணைத்து கடற்தொழிலாளர்கள் பாரிய போராட்டத்தினை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

இது தொடர்பில் அவர்கள் குறித்த மனுவில் முல்லைத்தீவு மாவட்டத்தில் தென்னிலங்கை பகுதியில் இருந்து அட்டை பிடிப்பு தொழிலில் ஈடுபடுகின்றவர்கள் சாலைப்பகுதியில் நிலைகொண்டு 40 குதிரைவலு கொண்ட இயங்திரங்களை பயன்படுத்தி இரவு பகலாக சாலையில் இருந்து யாழ்ப்பாணம் காங்கேசன்துறைவரை தமது சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றார்கள்.

இதனால் கரையோர வளம் பாதிக்கப்பட்டுள்ளது, கரைவலைதொழில் செய்பவர்களின் கம்பான்களை வெட்டுவதும் வலைகளை வெட்டுவதும் நாளாந்தம் அதிகரித்து செல்கின்றது.

கடலில் சங்குகளை எடுப்பதும் பாரிய ஆயுதங்களால் மீன்களை குத்திப்பிடிப்பதும், சுருக்கு வலைகளை பயன்படுத்துவதும், குண்டுவைத்து மீன்களை பிடித்தும் அழித்து வருகின்றார்கள்

அட்டை பிடிப்பு என்ற பெயரில் வந்து பலநோக்கங்களை வடகடலில் உள்ள வளங்களை அள்ளி செல்கின்றார்கள் அத்துடன் சட்விரோத மதுபோதைகள் உள்ளிட்டவற்றையும் கடத்துகின்றார்கள்.

எனவே எமது மக்களின் வளங்களையும், வாழ்வாதாரத்தினையும், பாதுகாத்து தருமாறு அரச அதிகாரிகளடம் கடற்றொழிலாளர்கள் கோரிக்கை வித்துள்ளார்கள்.

இது தொடர்பில் அவர்கள் தங்கியுள்ள முல்லைத்தீவு மாவட்டத்தில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளான மாவட்ட செயலர், கடற்தொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரி, பிரதேச செயலாளர், மற்றும் வடமாகாண ஆளுநர், கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசம் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் சுகிர்தன், மன்னார் சமூகப் பொருளாதார மேம்பாட்டுக்கன நிறுவன இயக்குனர் உள்ளிட்டவர்களுக்கு மனு இன்று கையளித்துள்ளார்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .