Niroshini / 2021 ஜனவரி 03 , பி.ப. 07:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
உறுப்புநாடுகள் மற்றும் மனித உரிமைகள் பேரவை, அதன் ஆணையாளர் ஆகியோருக்கு தெளிவான ஒரு செய்தியை வழங்கவேண்டியமை தொடர்பாக ஓர் இணக்கப்பாடு வந்துள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
ஜெனிவா விடயங்களை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பான ஆலோசனை குழு கூட்டம், வவுனியா -குருமன்காட்டில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில், இன்று நடைபெற்றது. அதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், பொறுப்பு கூறல் தொடர்பாக மனித உரிமைகள் பேரவையில் எத்தனையோ தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டும், அந்த விடயம் ஒரு பூச்சியத்தில் இருக்கும் நிலையில், எதிர்காலத்தில் எவ்வாறான அணுகுமுறைகளை எடுப்பது என்பது தொடர்பாக இன்று பேசியிருந்தோமென்றார்.
2012இலிருந்து தமிழ்த் தேசிய மக்கள் முண்ணனி அந்த விடயத்தில் ஒரு தெளிவான நிலைப்பாட்டை வலியுறுத்தி வந்திருக்கிறோம். அது தொடர்பிலும் பேசப்பட்டதெனத் தெரிவித்த அவர், மனித உரிமைகள் விடயத்தில் பொறுப்புக்கூறல் தொடர்பாக கட்சிகள் மட்டத்தில் இருக்க கூடிய பலவீனத்தை முழுமையாக விளங்கிக்கொள்ளக்கூடிய அளவுக்கு ஓர் இணக்கப்பாடு வந்திருந்தது எனவும் கூறினார்.
'மேலதிகமாக வடக்கு - கிழக்கை சார்ந்த தமிழ்க் கட்சிகள், சிவில் அமைப்புகள் ஒரு புள்ளியில் சந்திக்ககூடிய வகையில,; உறுப்புநாடுகள் மற்றும் மனித உரிமைகள் பேரவை, அதன் ஆணையாளர் ஆகியோருக்கு தெளிவான ஒரு செய்தியை வழங்கவேண்டியமை தொடர்பாகவும் ஓர் இணக்கப்பாடு வந்துள்ளது.
'குறித்த விடயம் தொடர்பாக மேலதிகமாக செயற்பாட்டை முன்னெடுப்பதற்கு, நானும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், சிவில் சமூகபிரதிநிதிகளின் அமைப்பும், விக்னேஸ்வரனுடைய அமைப்பு உள்ளிட்ட ஒரு குழு இணைந்து ஒரு புள்ளி என்ற விடயத்தை எழுத்து மூலம் ஆவணப்படுத்துவதற்கு இணங்கியிருக்கிறோம். மிக விரைவில் அது முன்னெடுக்கப்படும். அதனை ஓர் ஆரம்பமாக வைத்து அடுத்தகட்ட சந்திப்புகளை மேற்கொள்வதற்கு நாம் இணங்கியிருக்கிறோம்' எனவும், அவர் கூறினார்.
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025