2025 மே 21, புதன்கிழமை

தேராவில் பகுதியில் யானைகள் அட்டகாசம்

Editorial   / 2019 செப்டெம்பர் 04 , பி.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு - தேராவில் பகுதியில் காட்டுயானைகளின் தாக்கத்தால் தாங்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குவதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

தேராவில் கிராமத்தில் மக்கள் குடியிருப்புக்;களுக்குள் தினமும் காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்துக் காணப்படுவதாகவும் இதனால் தாங்கள் அன்றாடம் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் பிரதேச மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதாவது, தினமும் மாலை, இரவு வேளைகளில் மக்கள் குடியிருப்புகளுக்குள் புகும் காட்டு யானைகள் பயன்தரு மரங்களையும் வாழ்வாதார பயிர் செய்கைகளையும் அழித்து வருகின்றன எனத் தெரிவித்துள்ள பிரதேச மக்கள், அண்மையில் இந்தப்பிரதேசத்தில் யானையினால் வீடு ஒன்றும் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு தமது பிரதேசத்தில் தினமும் காணப்படும் காட்டுயானைகளை கட்;டுப்படுத்த யானை வேலிகளை அமைத்து தருமாறு, பிரதேச மக்கள் கோரியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X