Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
சண்முகம் தவசீலன் / 2018 ஜனவரி 14 , பி.ப. 06:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
முல்லைத்தீவு மாவட்டத்தில், நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தலில், புதுக்குடியிருப்பு பிரதேச சபைத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவருடைய சுவரொட்டிகள், ஒட்டுசுட்டான் நகரெங்கும் ஒட்டப்பட்டுள்ளன.
குறிப்பாக, சுவரொட்டிகள் ஒட்டப்பட்டால், அவர்களை கைது செய்யவும் ஒட்டவிடாது தடுக்கவும் மீறி ஒட்டினால், அதனை அகற்றவும், விசேட பொலிஸார் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
இருப்பினும், ஒட்டுசுட்டான் நகர்ப் பகுதியில், பல இடங்களிலும் குறிப்பாக, பாடசாலை நுழைவாயில், வைத்திசாலை நுழைவாயில், பஸ் தரிப்பிடம், வீதியோரம் உள்ள பாலங்கள் என எண்ணற்ற சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்தில் இருந்து 100 மீற்றருக்கும் ஒரு கிலோமீற்றருக்கும் இடைப்பட்ட பகுதியிலேயே, இவை ஒட்டப்பட்டுள்ளன. இவ்வாறு ஒட்டப்பட்ட சுவரொட்டிகள், இந்த செய்தி வெளியாகும் வரை அகற்றப்படவில்லை. இதற்கு அருகில் பொலிஸார் வீதி சோதனையில் ஈடுபட்டும், இவை அகற்றவில்லை
1 hours ago
2 hours ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
5 hours ago