Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2020 ஒக்டோபர் 27 , பி.ப. 03:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
பொதுமக்களின் கடும் எதிர்ப்பை அடுத்து, முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று, பொன்னகர் கிராமத்தில், தொலைத்தொடர்பு கோபுரம் அமைப்பதற்காக வழங்கப்பட்ட அனுமதியை மீளப்பெற்றுள்ளதாக, பிரதேச சபை தவிசாளர் க.தவராசா தெரிவித்தார்.
பொன்னகர் பகுதியில், சிறிய தொலைத்தொடர்பு கோபுரமொன்றை அமைத்து, தொலைத்தொடர்பு சேவையை விஸ்தரிபதுடன், அதில் கமெரா, மின்குமிழ் என்பன இணைப்பு செய்வதற்காக, டயலக் நிறுவனத்தினர் அனுமதி கோரினர்.
இதற்கமைய, மக்கள் நன்மை கருதி இதற்கான அனுமதி வழங்கப்பட்ட போதும், இந்தத் தொலைத்தொடர்பு கோபுரத்தால் தீங்கு ஏற்படும் எனத் தெரிவித்து அப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததுடன், அது தொடர்பில் பிரதேச செயலாளரிடமும் முறையிட்டனர்.
இதையடுத்து, டயலக் நிறுவனத்துக்;கு பிரதேச சபை ஊடாக வழங்கப்பட்ட அனுமதியை வாபஸ் பெற்றுக்கொள்வதாக, தவிசாளர் அறிவித்தார்.
இதற்கான கடிதத்தை அனுப்பிவைக்குமாறு, கரைதுறைப்பற்று பிரதேச சபை செயலாளருக்கு பணித்துள்ளதாகவும், தவிசாளர் தெரிவித்தார்.
11 minute ago
19 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
19 minute ago