Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
சுப்பிரமணியம் பாஸ்கரன் / 2018 நவம்பர் 15 , மு.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 128 கிலோ மீற்றர் கரையோரப்பகுதிகளில் கடற்தொழில்களில் ஈடுபட்டு வரும் 3 ஆயிரத்து 389 வரையான மீனவர்கள் தமது தொழில்சார் நடவடிக்கைகளில் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்வதாக பூநகரி கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம் தெரிவித்துள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள 70 வீதமான மக்களின் பிரதான தொழிலாக விவசாயம் காணப்படுகின்ற போதும் மொத்தமாகவுள்ள குடும்பங்களில் 4 ஆயிரத்து 205 இற்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.
இதில் தற்போது கரைச்சி கண்டாவளை, பச்சிலைப்;பள்ளி, பூநகரி ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளில் உள்ள சுமார் 128 கிலோ மீற்றர் நீளமான கரையோரப்பகுதிகளில் 3 ஆயிரத்து 389 பேர் மீன்பிடிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறு மீன்பிடியில் ஈடுபடுபவர்கள் வெளி மாவட்ட மீனவர்களின் அத்துமீறிய தொழில் நடவடிக்கைள் காரணமாக தமது தொழில் நடவடிக்;கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூடுதலான கரையோரப்பகுதிகளில் இறங்குதுறைகள் இன்மை, உரிய தொழில் உபகரணங்கள் இன்மை, வெளிச்ச வீடுகள் இன்மை என்பன காரணமாக தமது தொழில் நடவடிக்கைகளில் நெருக்கடிகளை எதிர்கொள்வதாக பூநகரி கடற்தொழிலாளர் கூட்;டுறவுச் சங்கங்களின் சமாசத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 minute ago
23 minute ago
27 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
23 minute ago
27 minute ago
33 minute ago