சண்முகம் தவசீலன் / 2018 மார்ச் 22 , பி.ப. 05:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் விடுதலைப்புலிகள் தங்கத்தை புதைத்து வைத்ததாக நம்பப்படும் இடத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு நடவடிக்கை தோல்வியில் முடிவடைந்துள்ளது.
புதுக்குடியிருப்பு பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில், முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதவான் எஸ்.லெனிஸ்குமார் முன்னிலையில் அகழ்வு நடவடிக்கை கடந்த 20ஆம் திகதி முன்னெடுக்கப்பட்டது.
அன்றைய தினம் அகழ்வு நடவடிக்கைக்கு நேரம் போதாமையால், இன்று (22) குறித்த நடவடிக்கை தொடரும் என தெரிவித்த நீதவான் அவ்விடத்துக்கு பொலிஸார் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
இந்நிலையில், இன்று (22) மேற்கொள்ளப்பட்ட அகழ்வு நடவடிக்கையில் எவ்வித பொருட்களும் கிடைக்கப்பெறாத நிலையில், குறித்த குழியை மூடுமாறு நீதவான் உத்தரவிட்டார்.
8 hours ago
9 hours ago
9 hours ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
9 hours ago
20 Dec 2025