2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

நீதிக்கான நடைபயணத்துக்கு கூட்டமைப்பின் இளைஞர் அணி ஆதரவு

George   / 2016 ஓகஸ்ட் 18 , பி.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

தமிழர் தாயகத்தில் சிங்கள பௌத்த மயமாக்கலை எதிர்த்து 22ஆம் திகதி கிளிநொச்சியில் நடைபெறவிருக்கும் நீதிக்கான நடை பயணத்துக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இளைஞர் அணி ஆதரவு தெரிவித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

திட்டமிட்ட வகையில் மிகவும் சூட்சுமமாக தமிழர் தாயகப் பகுதிகளில் விகாரைகளையும் புத்தர் சிலைகளையும் நிறுவி இராணுவப் பலத்துடன் தமிழர் தாயகத்தை சிங்கள மயமாக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. இதனை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது.

எமது தாயகப் பிரதேசம் எமக்கே சொந்தமானது. எமது இனத்தின் தனித்துவத்தைக் பாதுகாத்து எமது நிலைத்திருப்புக்கான செயற்பாடுகளை நாமே செய்ய வேண்டும். நாம் அதைச் செய்யத் தவறுவோமானால் எமது தமிழர் தாயகப் பிரதேசம் அனைத்தும் பௌத்த பேரினவாதத்தால் விழுங்கப்பட்டு இறுதியில் எமது தமிழினம் அழித்தொழிக்கப்பட்டு விடும்.

எனவே, கிளிநொச்சி மாவட்ட கிராம அபிவிருத்திச் சங்கங்களின் சமாசமும் பொது அமைப்புக்களின் ஒன்றியமும் இணைந்து, எதிர்வரும் திங்கட்கிழமை (22) காலை 7.30 மணியளவில் ஆனையிறவிலிருந்து கிளிநொச்சி ஜ.நா பணியகம் வரை மேற்கொள்ளவுள்ள 'நீதிக்கான நடைபயணத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட இளைஞர் அணி பூரண ஆதரைவை வழங்குகின்றது' என இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .