Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Niroshini / 2016 ஜூன் 20 , மு.ப. 03:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் தோழர் க.பத்மநாபா மற்றும் போராளிகளின் 26ஆவது நினைவு தினம் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை மன்னார் - பள்ளிமுனை பிரதான வீதியில் அமைந்துள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆர்.குமரேஸ் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம், வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசிலன், ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் மத்திய குழு உறுப்பினர்களான யூட் குரூஸ், பீற்றர் மடுத்தின், ஜேம்ஸ் ஜேசுதாஸ், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது, உயிர் நீத்த ஏனைய போராளிகளுக்கு பொதுமக்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Jul 2025
04 Jul 2025