Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Kogilavani / 2017 ஏப்ரல் 12 , மு.ப. 08:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.என்.நிபோஜன்
"கரை எழில்" நூலில் எழுதப்பட்டிருந்ததாகக் கூறப்படும் சர்ச்கைக்குரிய கருத்தின் காரணமாக, அந்நூல் விநியோகம் இடைநிறுத்தப்பட்டதாக, கரைச்சி கலாசார பேரவை தெரிவித்துள்ளது.
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகத்தினால், வருடந்தோறும் நடத்தப்பட்டு வருகின்ற கலாசார நிகழ்வில், 'கரை எழில்' எனும் நூலும் வெளியிடப்படுவது வழமை.
ஒவ்வொரு வருடமும் பல்வேறு ஆக்கங்களுடன் வெளியிடப்படுகின்ற கரை எழில் நூலில், 'கிளிநொச்சியும் மலையக தமிழர்களும்' எனும் தலைப்பில், எழுத்தாளர் ஒருவரின் கட்டுரையும் வெளிவந்திருந்தது.
குறித்த கட்டுரையில், எழுத்தாளர் கிளிநொச்சி வாழ் மலையக தமிழர்களை, மிக மோசமாக இழிவுபடுத்தும் வகையில் கருத்துகளைப் பதிவு செய்திருந்ததால்,
குறித்த கருத்துகளுக்கு சமூகத்தில் பல்வேறு தரப்பினர்களிடமிருந்தும் கடும் எதிர்ப்புக் கிளம்பியதன் காரணமாக, கரை எழில் நூல் விநியோகம் இடைநிறுத்தப்பட்டதாக, கரைச்சி கலாசார பேரவை தெரிவித்துள்ளது.
குறித்த நூலில் இடம்பெற்றுள்ள, சர்சைக்குரிய கருத்துகள் நீக்கப்பட்டு, அந்நூல் மீண்டும் வெளியிடப்படவுள்ளதாக, பேரவை மேலும் தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago