Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2016 செப்டெம்பர் 02 , மு.ப. 05:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகை பற்றிய ஆங்கில நூல் வெளியீடு, நேற்று வியாழக்கிழமை (01) மாலை , மன்னார் குடும்ப நல பொது நிலையினர் பணியக மண்டபத்தில் நடைபெற்றது.
மன்னார் மறைமாவட்ட சமூகத் தொடர்பு அருட்பணி மையம் 'கலையருவி' அமைப்பின் இயக்குநர் அருட்திரு. தமிழ்நேசன் அடிகளாரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், அருட்தந்தை கலாநிதி வின்சன்ற் பற்றிக் (அமதி) அடிகளார் எழுதிய 'யு டுiஎiபெ ர்நசழ' (ஓர் வாழும் நாயகன்) என்ற பெயரைக் கொண்ட குறித்த ஆங்கில நூலானது மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்கள் எழுதிய சில ஆவணங்களினதும், அவரைப்பற்றி எழுதப்பட்ட சில ஆவணங்களினதும் தொகுப்பாக அமைந்துள்ளது.
மன்னார் மறைமாவட்டக் குருமுதல்வர் அருட்திரு. ஏ.விக்டர் சோசை அடிகளார் தலைமையில் குறித்த நூல் வெளியீடு விழா இடம் பெற்றது.
நூலின் முதல் பிரதியை நூலாசிரியர் அருட்தந்தை கலாநிதி வின்சன்ற் பற்றிக் அடிகளார் மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகைக்கு வழங்கி வைத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago