2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

நிழல் குடைகள் இல்லை

Princiya Dixci   / 2017 மார்ச் 29 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு நகரத்தில், பஸ் நிழல் குடைகள் போதியளவில் இல்லாமை காரணமாக, மரநிழல்களில் காத்திருக்கும் பயணிகள் வெயில், மழை காலங்களில் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.

கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் முல்லைத்தீவு நகர அபிவிருத்திக் குழு, முல்லைத்தீவு மாவட்டச் செயலாளரை சந்தித்துக் கலந்துரையாடியபோது நிழல்குடைகளை அமைக்க வேண்டும் என்றும்  கோரிக்கை முன்வைத்திருந்தது.

எனினும், முல்லைத்தீவு நகரத்தில்  நிரந்தர பஸ் நிலையம் அமைக்கப்படாத நிலையில், பயணிகள் கால் கடுக்க, வீதிகளில் காத்திருந்து பயணிக்க வேண்டியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .