Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜூலை 21 , மு.ப. 11:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன் விடுத்த கோரிக்கையை ஏற்று நிதியமைச்சர் மங்கள சமவீரவால் வரவு- செலவுத் திட்டத்தில், கைத்தொழில் வர்த்தக அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டநிதியிலிருந்து 250 மில்லியன் ரூபாவையும் பெருநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சின் நிதியையும் கொண்டே, மன்னார் மாவட்டத்தின் தற்போதைய அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக, அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
அத்துடன், மன்னார் நகரத்தை மாத்திரமல்ல மன்னார் மாவட்டத்திலுள்ள 5 பிரதேச சபைகளின் உள்ள நகரை அபிவிருத்தி செய்வதற்காக, மேம்படுத்துவதற்காக நகர அபிவிருத்தி அதிகார சபை முறையான அறிக்கைகளை தயாரித்துள்ளது எனவும் குறிப்பிட்டார்
மன்னார் நகரில் நவீன சந்தைத் தொகுதியுடன் கூடிய புதிய பஸ் நிலையத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று (20) நடைபெற்றது. இதன்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறியதாவது,
“மன்னார் பிரதேசமென்பது பின்தங்கிய பிரதேசமாக கூறப்பட்டாலும் கூட இலங்கை வரலாற்றில் ஒரு வர்த்தக கேந்திர நிலையமாக இருந்ததை நான் நினைவுபடுத்த விரும்புகின்றேன்.
“இந்தியாவின் கேரலா மாநிலத்தின் கொச்சின் துறைமுகமும் மாதோட்டத் துறைமுகமும் ஒரே இணைப்பில் சந்திக்கும் துறையாகக் காணப்பட்டது.
“யுத்தம் நிறைவடைந்த பின்னர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடன் இணைந்து மின்சக்தி அமைச்சராக நான் இருந்த வேளை இந்தப் பிரதேசத்துக்கு மின்சக்தி மற்றும் எரிசக்தி என்பவற்றை நாம் எவ்வாறு கொண்டு வந்தோம் என்று உங்களுக்குத் தெரியும்.
“அதே போன்று இந்த பிரதேசத்தில் செயலிழந்து கிடந்த மின்சாரத்தை வழமைக்கு கொண்டு வர நாம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்.
“அது மாத்திரமன்றி இந்த நாட்டுக்கே மின்சாரம் வழங்கக்கூடிய காற்றலை மின்சாரத்தை பெறக்கூடிய இடம் மன்னார் மாவட்டமே.
“இவ்விரு வளங்களையும் நாம் விருத்தி செய்தால் துபாய் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தைவிட வளம்கொழிக்கும் இடமாக இந்தப் பிரதேசத்தை மாற்ற முடியும்.
“அத்துடன், சிலாவத்துறை மற்றும்பேசாலை நகரத்தை நிர்மாணிக்கும் திட்டத்தையும் வகுத்துள்ளோம். அது மாத்திரமன்றி அல்பதா விளையாட்டு மைதான புனரமைப்பு பணிகளோடு மினசாரத்தை எடுக்கவும் நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.
“பள்ளிமுனை விளையாட்டு மைதானத்தையும் புனரமைத்து கையளிக்கவுள்ளோம். இந்த நாட்டில் தற்போதைய ஜனாதிபதியைக் கொண்டு வருவதற்கும் நல்லாட்சியைக் கொண்டு வருவதற்கும் நாங்கள் அளித்த பங்களிப்பை இங்கு நினைவுபடுத்த விரும்புகின்றேன்.
“நான் உட்பட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் ஒரு சில அரசியல் முக்கியஸ்தர்களினால் மேற்கொண்ட முயற்சிகளினாலேயே புதிய அரசாங்கம் உருவாக்கப்பட்டதென்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்” என்றார்.
21 minute ago
34 minute ago
45 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
34 minute ago
45 minute ago
1 hours ago