2025 மே 23, வெள்ளிக்கிழமை

நடுக்குடாவில் 939 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்பு

எஸ்.றொசேரியன் லெம்பேட்   / 2019 ஜூன் 25 , பி.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார் நடுக்குடா கடற்கரை பகுதியில்  கடற்படையினர் நேற்று (24) மாலை மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 939.2 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்க்கப்பட்டது.

வட மத்திய கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 45 பொதிகளில் அடைக்கப்பட்ட பீடி இலைகள் இவ்வாறு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட பீடி இலைகளைக்கொண்ட பொதிகள் நடுக்குடா கடற்கரை பகுதியில் கைவிடப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
மீட்கப்பட்ட பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் சுங்கத்திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் இது வரை 16, 500 கிலோ கிராம் பீடி இலைகளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X