2025 மே 10, சனிக்கிழமை

நடைபாதை வியாபாரிகளால் தொற்று பரவும் அபாயம்

Niroshini   / 2021 ஜூன் 22 , பி.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-க. அகரன்

வவுனியா நடைபாதை வியாபாரிகளால், கொரோனா தொற்று பரவலடையும் நிலை ஏற்ப்பட்டுள்ளதுடன், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்குடன், அரசாங்கத்தால்  அமல்படுத்தப்பட்ட பயணத்தடை, நேற்று (21) தளர்த்தப்பட்டது.

இதனையடுத்து, வவுனியா மாவட்டத்தில் அதிகளவான  பொதுமக்கள் பல்வேறு தேவைகள் நிமித்தம் நகருக்குள் வருகைதந்து பொருட்கொள்வனவில் ஈடுபட்டு வருகின்றனர்.  

இந்நிலையில், வவுனியா சந்தைசுற்றுவட்ட வீதியின் இருமரங்கிலும் ஹொறவப்பொத்தானை வீதியில் உள்ள நடைபாதைகளிலும் மரக்கறிகள் மற்றும் ஏனைய பொருள்களை வைத்து விற்பனை செய்துவரும் வியாபாரிகள், சுகாதார நடைமுறைகளை உரியவகையில் பேணவில்லை என்று குற்றஞ்சாட்டப்படுகின்றது.  

இதேவேளை, குறித்த வியாபாரிகளிடம் இருந்து பொருள்களை கொள்வனவு செய்யும் பொதுமக்களும், சுகாதார நடைமுறைகளை பேணாமல், நெரிசலான நிலைமையை ஏற்ப்படுத்துகின்றனர். இதனால் குறித்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்ப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எனவே, நகரசபை மற்றும் சுகாதாரபிரிவினர் இவ்விடயம் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்படுகின்றது.  
   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X