2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

நண்டு பதனிடும் நிலையம் திறந்து வைப்பு

நடராசா கிருஸ்ணகுமார்   / 2018 பெப்ரவரி 20 , பி.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி பூநகரி வலைப்பாட்டில் நண்டு பதனிடும் நிலையம் நேற்று (19) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

நோர்வே அரசாங்கத்தின் 24 இலட்சம் ரூபாய் நிதி உதவியில், வலைப்பாடு கடற்றொழிலாளர் சங்கம், தப்ரபேன் நிறுவனம் ஆகியன இணைந்து, இந் நண்டு பதனிடும் நிலையத்தை அமைத்துள்ளனர்.

வலைப்பாடு கடற்றொழிலாளர் சங்கத் தலைவர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் நோர்வேயின் இலங்கைக்கான பிரதி உயர்ஸ்தானிகர் மெனிக்கா சிவன்ஸ் கருட், தப்ரபேன் நிறுவனத்தின் பிராந்திய முகாமையாளர் எஸ்.துசிதன் ஆகியோர் இணைந்து நண்டு பதனிடும் நிலையத்தைத் திறந்து வைத்தனர்.

இந்நண்டு பதனிடும் நிலையத்தினூடாக 30 பெண்களுக்கான வேலை வாய்ப்புகள் மற்றும் 250 கடற்றொழிலாளர் குடும்பங்களின் வாழ்வாதார உதவிகள் கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் கிராம அலுவலர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோத்தர் மற்றும் கடற்றொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X